முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் ஜோடியாக, விரைவில் நடிக்க இருப்பதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இப்போது, அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இதையடுத்து, பாலிவுட்டில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன்‘மிஷன் மஜ்னு’, அமிதாப்பச்சனுடன் ‘குட் பை’ படங்களில் நடிக்கிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், ’மிக விரைவில்’ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என் லவ்” என்று பதிலளித்துள்ளார்.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது, அதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:

Related posts

புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!

Jeba Arul Robinson

கேரளாவில் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவி ஏற்பு!

Ezhilarasan

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

Saravana Kumar