’இங்க இப்படி, அங்க அப்படி’: ராஷ்மிகாவின் டிரெண்டிங் ஐடியா!

கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டாக, அங்கு மோஸ்ட் வாண்டட்…

கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அப்படியே டோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டாக, அங்கு மோஸ்ட் வாண்டட் நாயகி ஆனார். இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கும் வந்தார் ராஷ்மிகா. ‘எனக்கு தமிழ் நாட்டின் உணவு ரொம்ப பிடிக்கும். தமிழ்நாட்டு மருமகளா வர ஆசை’ என்று கூறி ரசிகர்களை ஜில்லிட வைத்தார் சமீபத்தில். அடுத்து, நடிகைகளின் கனவான பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில், அதற்குள் மூன்று படங்கள் கைவசம்.

‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தில் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா, ‘குட் பை’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுடனும் நடிக்கிறார். அதோடு பாலிவுட் தயாரிப்பாளரான சாஜித் நதியத்வாலாவும், தான் தயாரிக்கும் படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், ’நான் வளரும் போது எனக்கு இன்ஸ்பிரேஷனே மாதுரி தீக்‌ஷித்தான். அவங்க நடனத்தைப் பார்த்து நானும் அப்படியே ஆடிப் பார்ப்பேன். நடிகையான பிறகு என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை. என் அம்மா இருக்காங்க. ஆனால், அவருக்கு சினிமா பற்றி தெரியாது. மாதுரி தீக்‌ஷித், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகியோர் நடிப்பு எனக்கு பிடிக்கும். இவங்க வரிசையில தீபிகா படுகோன், ஆலியா பட்-டையும் சேர்த்திருக்கேன். இவங்க ஒவ்வொருவரும் போராடி இந்த நிலைக்கு வந்திருக்காங்க. அது எவ்வளவு கஷ்டம் அப்படிங்கறதை ஒரு பெண்ணா நான் அறிவேன். அவங்க சாதனைகளை வணங்குறேன்’ என்றிருக்கிறார் ராஷ்மிகா.

எந்தெந்த இடத்துக்கு செல்கிறார்களோ, அந்தந்த இடத்து டாப் பிரபலங்களைப் புகழ்வதுதான் சினிமா டிரெண்ட். ’தமிழுக்கு வந்தால் இப்படி, இந்திக்கு சென்றால் அப்படி’ என்று நடிகை ராஷ்மிகாவும் அதைப் பக்காவாக செய்கிறார் என்கிறார்கள், ரசிகர்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.