ஒசூர் அருகே கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அடுத்த கங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் நீலிமா என்பவரின் காரில், லாரியை வைத்து ஏற்றி கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த முருகேசனை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒசூர் அருகே உள்ள கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் செயல்படாத கல்குவாரி நீர்குட்டையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, முருகேசனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப்பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







