அரியவகை முகச்சிதைவு நோய்; சிறுமி தான்யாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது

சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை காலை 8 மணி தொடங்கி 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முகச்சிதைவு அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது . திருவள்ளூர் மாவட்டம்…

சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை காலை 8 மணி தொடங்கி 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முகச்சிதைவு அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது .

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள்,மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் தான்யாவுக்கு 9 வயதாகிறது. தான்யா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார் . சிறுமி தான்யா மிக அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்து செய்தி ஊடகங்களில் வெளியிடபட்டது.இதனை அறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தேவையானஅனைத்து உதவிகளும் தமிழக அரசு மூலம் செய்து தரப்படும் என  கூறியிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தினமும் அந்த சிறுமி தானியாவை அமைச்சர் நாசர் தினமும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுமி தான்யாவிற்கு இன்று காலை 8 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் வந்து தான்யாவுக்கு தைரியம் ஊட்டி அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தார்.
பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்கு தான் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் வயதில் பெரியவர்களுக்கு தான் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் சிறுமி தான்யா முகச்சிதைவால் அதிக ளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 8மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.