இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட மறுநாளை ரம்ஜான் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். அதன் படி இஸ்லாமியர்கள் கடந்த மாதம் முதல் ரமலான் நோன்பை தொடங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படவில்லை. இதனால் மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளின் தலைமை காஜி அறிவித்துள்ளனர்.







