இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் கச்சதீவிற்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தூதர் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப் படகுகளையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மீனவர்களிடம் விசாரணை நடத்தி மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை வவுனியா
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமேஸ்வரம் அனைத்த விசைப்படகு மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால், ராமேஸ்வரம் மீன்பிடி
துறைமுகங்களில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதித்துள்ளது.
மேலும் வரும் ஞாயிற்று கிழமை காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் சிறையில்
உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.