தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் போனி கபூர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
68வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தைச் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். உண்மை கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று வாழ்த்து தெரிவித்திருந்த முதலமைச்சர், சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனக் கூறி இருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் போனி கபூர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
#NationalFilmAwards தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் @Suriya_offl , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்
— Rajinikanth (@rajinikanth) July 23, 2022
அண்மைச் செய்தி: ‘ஹேக்கர்களிடம் இருந்து லேப்டாப் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பது எப்படி?’
நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் எனக் கூறியுள்ளார்.
My congratulations to @Suriya_offl & @Aparnabala2 for winning the Best Actor & Best Actress respectively at the 68th National Film Awards for their performance & the team for winning Best Feature Film, Best Screenplay, Best Background score for Soorarai Pottru.
— Boney Kapoor (@BoneyKapoor) July 23, 2022
இதேபோல, தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், 68வது தேசிய திரைப்பட விருதுகளில் முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றதற்காகவும், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசையைச் சூரரைப் போற்று வென்றுள்ளது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.








