முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து…

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் ஜி-20  (சிவிலியன் 20) என்ற குழுவின் மூலம் அரசு துறைகளுடன் இணைந்து பசுமையாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறையுடன் இணைந்து அடர்த்தி
குறைந்த காடுகளை பசுமையாக்கும் முயற்சியாக இம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு இன மர விதைகளான வேம்பு, புளி, நாவல், புங்கம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப்பந்துகளை ஹெலிகாப்டர் மூலம் உச்சிப்புளி அடுத்துள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலமாக தூவப்பட்டது.

வானில் இருந்து விதைப்பந்துகள் தூவும் நிகழ்வினை இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக கமாண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.