5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு 4-ம் ஆண்டு நிறைவு நாள் விழா…

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு 4-ம் ஆண்டு நிறைவு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் நாட்டில் இதுவரை 66 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி செலுத்தும் நடைமுறை நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி (GST). கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் வரி உள்ளிட்ட வரிகளுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வரி விதிப்பு நடைமுறையிலிருந்தது. இவற்றையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரே வரியாக ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி வரியிலிருந்து கிடைக்கும் வருவாயை மத்திய அரசு CGST என்ற பெயரிலும், மாநில அரசு SGST என்ற பெயரிலும் மாநிலங்களுக்கு இடையே IGST என்ற பெயர்களில் வருவாயைப் பிரித்துக்கொள்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.