கமுதி அருகே பாரம்பரிய மீன் பிடித் திருவிழா – கண்மாயில் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித்திருவிழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித்திருவிழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம் கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு பின்னர் பாரம்பரிய மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் அவ்வூரை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து வயதினரும் வேறுபாடின்றி ஊத்தா, கச்சா வலை உள்ளிட்டவற்றை கொண்டு கண்மாயில் இறங்கினர். கண்மாயில் இருந்த கட்லா,கெண்டை,கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்களை அள்ளிச் சென்றனர்.

சிலரின் கைகளுக்குள் 5 கிலோ வரையிலான பெரிய மீன்களும் சிக்கின. வேறுபாடுகளை மறந்து ஒரே நேரத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து சென்றது காண்போரை பரவசமாக்கியது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.