ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர்.
இறைத்தூதரான இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய முஸ்லீம் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலுங்கு இலியுல்லா தர்கா திடலில் நடைபெற்ற இத்தொழுகையில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதைபோல ராமநாதபுரம் சந்தை திடலில், தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
– வேந்தன்







