நாமக்கல் அருகே அய்யம்பாளையத்தில் பகவதி அம்மன் ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம் குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் சக்தி விநாயகர், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், கருப்பன் சாமி ஆலயங்களில் குடமுழுக்கு பெருவிழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவாச்சாரியார்கள் வேள்விகள் அமைத்து விநாயகர் வழிபாடு துவங்கி இரண்டு வேள்விகள் அமைத்து நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் திருக்கோயிலை சுற்றிவர தனி சன்னதியிலுள்ள விநாயகர், செல்லாண்டி அம்மன், பகவதியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயில் மேல் அமைந்திருக்கும் விமான கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் விநாயகர் செல்லாண்டியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கலச நீர் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
– அனகா காளமேகன்