பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலர் தனது பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பியப்போது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35).இவர்…

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலர் தனது பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பியப்போது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35).இவர் சென்னை வளசரவாக்கத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். குணாராஜுக்கு திருமணமாகி அவரது மனைவி கருவுற்று இருந்தார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக குணாராஜ் விடுமுறை எடுத்துவிட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் தனது குழந்தையை பார்த்து விட்டு ராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனத்தில்
சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பேருந்து குணாராஜ் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது எதிர்பாரத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.