ரமலான் நோன்பு கால சிறப்பு உணவு வகைகளை சுவைக்க சென்னை மண்ணடியில்
மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் ரமலான் நோன்பு சிறப்பு உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
உலகம் முழுவதும் காணப்படும் இஸ்லாமியர்களின் மிக பிரதான பண்டிகை ரமலான். இந்த
பண்டிகைக்காக இறைவனை மனதில் நிறுத்தி காலை முதல் மாலை வரை இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். இந்த நோன்பிற்கான சிறப்பு உணவுகள் சென்னையில் உள்ள ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் மண்ணடி பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றது..
பொதுவாக உணவு வகைகள் என்றாலே மக்களுக்கு அதனை ரசிப்பதற்கு ஆர்வம் அதிகமாகவே தூண்டும்.. உலகம் முழுவதும் மக்கள் பெருமளவில் தற்பொழுது தங்களது பாதி வாழ்க்கையை உணவை ரசித்து உண்ணுவதற்காகவே வாழ்ந்து வருகின்றனர். சாதாரண உணவாக இருந்தாலே அந்த உணவை ரசித்து உண்ணும் மக்கள் ரமலான் நோன்பு பல சிறப்பு உணவுகளை சும்மாவா விடுவார்கள். அப்படிதான் உணவுகளை ருசிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இந்த மண்ணடி பகுதிக்கு மக்களின் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகின்றது. அது மட்டும் இல்லாமல் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்டு இடங்களில் இருந்தும் நோன்பு கால சிறப்பு உணவுகளை ரசிப்பதற்காக மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
உணவு வகைகளை பொறுத்தவரையில் ஹங்கமா சிக்கன், கிரிஸ்பி சிக்கன், கேண்டி சிக்கன், குர்குரே சிக்கன், சிக்கன் சீஸ் ரோல், பர்கர் சிக்கன், ஹரியாலி சீஸ் ரோல், குல்பி சிக்கன் என 13 முதல் 15 வகையான நோன்பு காலத்தில் ருசிக்க கூடிய சிக்கன் வகைகளும் அது மட்டும் இல்லாமல் பீஃப் வகைகளும் அதிக அளவில் விற்கப்படுகிறது. இந்த உணவு வகைகள் அனைத்தும் பல பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் உணவு வகைகளை ரசிப்பதற்காகவே மக்களின் கூட்டம் அலை மோதி வருகிறது..
ரமலான் சிறப்பு உணவு வகைகளுக்காக மண்ணடியில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட
கடைகள் அமைந்திருக்கிறது. அதேபோல் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த இஸ்லாம் நோம்பு சிறப்பு உணவுகளின் பதிவு அதிகமாக இருப்பதால் அதை பார்த்து
சென்னை மண்ணடி பகுதிக்கு வருகின்ற மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உணவு வகைகளை விரும்பி ருசிப்பதற்காக அனைத்து மதத்தினரும் இங்கு வருகை தருவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக சென்னையில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளை ருசிப்பதற்காக உணவுக் கடைகளில் சாதாரணமாகவே மக்கள் கூட்டம் அலைமோதுவார்கள் இந்நிலையில் இது போன்ற ரமலான் நோன்பு கால சிறப்பு உணவுகள் மதங்களைக் கடந்து அனைவரையும் இணைக்க கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது.
நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அசோக் உடன் செய்தியாளர்
வர்ஷினி…









