‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என ஆனந்த் மஹேந்திரா X தளத்தில் பதிவு!

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை பற்றி  ‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,  தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை பற்றி  ‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,  தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : ராமர் சிலை பிரதிஷ்டை விழா: நடிகை பார்வதியின் பதிவு – குவியும் பாராட்டுகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பகல் 12.30 மணியளவில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

Image

இந்நிலையில்,  அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை கௌரவிக்கும் வகையில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,  தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் ஆனந்த் மகேந்திரா கூறியதாவது,  “ராமர் ‘மதத்தைக் கடந்த ஒரு உருவம்’ .  ஒருவரின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,  அனைவரும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் கருத்தை ஈர்க்கிறோம். மரியாதையுடனும் வலுவான மதிப்புகளுடனும் வாழ வேண்டும். ராமரின் அம்புகள் தீமை மற்றும் அநீதியை இலக்காகக் கொண்டுள்ளன. ‘ராம ராஜ்ஜியம்’ – சிறந்த ஆட்சி – அனைத்து சமூகங்களுக்கும் ஒரு லட்சியம். இன்று, ‘ராம்’ என்ற சொல் உலகிற்கு சொந்தமானது” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/anandmahindra/status/1749276817163518129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1749276817163518129%7Ctwgr%5Ed4487bcc3da30d81a399f2e1df6663054c299a49%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fayodhya-ram-mandir-ceremony-anand-mahindra-shares-monday-motivation-says-ram-belongs-to-the-world-101705910269836.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.