நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி – 300க்கும் மேற்பட்டோர் கைது..!!

நீண்ட நாள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய கோரி பாளையங்கோட்டை சிறை நோக்கி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டன் மேலப்பாளையத்தில் நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய…

நீண்ட நாள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய கோரி பாளையங்கோட்டை சிறை நோக்கி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டன் மேலப்பாளையத்தில் நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை சிறையை நோக்கி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு சிறைவாசி விடுதலை தொடர்பாக முழங்கங்களை எழுப்பினர்.

மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள்
தண்டனை சிறை வாசிகளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என  இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதன் பின்னர் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறை நோக்கி சிறை நிரப்பும் போராட்டத்திற்காக பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது காவல்துறையினர் பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்தால்
காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.