முக்கியச் செய்திகள் இந்தியா

மாநிலங்களவை எம்பி தேர்தல்; திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இருவரும், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமுவும் ராஜேஷ்குமாரும் போட்டியின்றி முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை, அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர் எஸ் பாரதி, டி கே எஸ் இளங்கோவன், அப்துல்லா ஆகியோர் முன்னிலையில், டாக்டர் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து மாநிலங்களவையில், திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?

Halley karthi

மீனவர்கள் சுட்டுக்கொலை: ரூ. 10 கோடி இழப்பீட்டுத் தொகையை பகிர்ந்து வழங்க உத்தரவு!

Gayathri Venkatesan

என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Halley karthi