லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் -15-ம் தேதி இந்தியா, சீனா துருப்புகளுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி பிரபல பாடகர் ஹரிஹரன் ‘கால்வான் கே வீர்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை இந்திய ராணுவ படை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பாடல் கல்வானைக் காக்கும் இந்திய ராணு வீரர்களின் வீரத்தயும், கடந்த ஆண்டு சீனாவிற்கு எதிரான கல்வான் தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவவீர்களை நினைவுகூரும் விதமாகவும் இந்த பாடல் வீடியோ அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் ஐந்து சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. இந்திய – சீனாவுக்கும் இடையில் கடந்த 45 ஆண்டுகளில் நடத்த மிக மோசமான தாக்குதலாக இந்த கல்வான் தாக்குதல் கருதப்படுகிறது.
இந்திய ராணுவத்தினர் பகிர்ந்துள்ள ‘கல்வான் கே வீர்’ வீடியோவில் கல்வான் ராணுவ வீரர்களின் பயிற்சிகள் மற்றும் அங்கு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், அசச்சுறுத்தலைகளை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
சீனாவை எதிர்த்து நடந்த தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களை நினைவுகூரும் விதமாகவும் அவர்களின் வீரத்தை போற்றும் வகையிலும் லடாக் எல்லையில் கடந்த ஆண்டு நினைவுதூண் ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தில் ‘Fire and Fury Corps’ பிரிவின் தளபதி ஆகாஷ் கெசிக் தலைமையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.