முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனும், தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டு நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவுக்குத் தடை: தேர்தல் ஆணையம்

Halley Karthik

ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்

Halley Karthik

“கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்

Saravana Kumar