தனது பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்பார் படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த. படத்தில், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் தீபாவளி அன்று வெளியாகிறது. சிறுத்தை சிவாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று ப்டத்தின் ட்ரெய்லர் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தனது பேரனுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தை பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து hoote செயலியில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ‘அண்ணாத்த’ படத்தை பார்க்க வேண்டும் என தனது பேரன், நீண்ட நாட்களாக அடம்பிடித்து வந்தார். அதனால், டெல்லி சென்று திரும்பியவுடன், எடிட்டிங் பணிகள் நிறைவடைந்து இருந்ததால், நேற்று நான், ஐஸ்வர்யா, சௌந்தர்யா, அவரின் கணவர் விஷாகன், மற்றும் பேரன்கள் அனைவரும் படம் பார்த்தோம். படத்தை மிகவும் ரசித்து பார்த்த பேரன் வேத் படம் முடிந்த பின்னர் தன்னை ஆரத்தழுவி, முத்தமிட்டு பாராட்டியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பேரனோடு அண்ணாத்த திரைப்படத்தை நேற்று பார்த்தேன். Part-1 https://t.co/6eDyTnHRb5
— Rajinikanth (@rajinikanth) October 28, 2021