முக்கியச் செய்திகள் சினிமா

‘அண்ணாத்த’ டீசர் வெளியானது

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மோஷன் போஸ்டர் மற்றும் இரு பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனால், இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசர் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயுத பூஜையன்று மாலை 6 மணிக்கு, அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி டீசர் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Gayathri Venkatesan

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Ezhilarasan

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்

Halley karthi