முக்கியச் செய்திகள் இந்தியா

பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்தி வைப்பு

தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டாசுக்கு தடைகோரிய மனு மற்றும் பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது. நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனக்கூறினர். மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே நீதிமன்றம் உள்ளது எனக்கூறினர். மேலும்,  விதி மீறல் இல்லை என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கூற்று முற்றிலும் தவறானது, விதி மீறல் தொடர்பான ஆய்வு முடிவுகளும் உள்ளது எனக்கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் குறைகிறது கொரோனா தொற்று!

Halley karthi

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Halley karthi

கொரோனாவைத் தடுக்க 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Halley karthi