அரசியலுக்கு வரக் கோரி மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ‘வா தலைவா வா’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து #அரசியலுக்குவாங்கரஜினி ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரசிகர்கள் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அரசியல் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி கட்டுப்பாட்டுடன் போராடிய ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். ரஜினி மக்கள் மன்ற தலைமையின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர முடியாததற்கான காரணங்களை ஏற்கனவே கூறி தனது முடிவை தெரிவித்துவிட்டதாக கூறியுள்ள அவர், இவ்வாறு தனது முடிவை தெரிவித்த பிறகும் அரசியலுக்கு வரக் கோரி மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். தனது முடிவை ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.