முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாதுகாப்புப்படை வீரர் சீனா ராணுவத்திடம் ஒப்படைப்பு!

இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் கடந்த 8 ஆம் தேதி வழிதவறி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் இன்று சீனாவிடம் ஒப்படைத்தது.

இந்தியாவில் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இருநாட்டுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லை பிரச்சனை காரணமாக எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் படைகளை குவித்துள்ளன. இதனிடையே நேற்று முந்தினம் இரவு இந்திய எல்லையான பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் வழிதவறி இந்திய பகுதியில் நுழைந்தார். இதனை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அந்த வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்தியப் பகுதிக்குள் வழிதவறி வந்த தங்கள் நாட்டு வீரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீனா நேற்று முந்தினம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த இந்திய ராணுவம் காணாமல் போன சீன வீரர் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் சீனத் தரப்புக்குத் அந்த வீரர் திருப்பியனுப்பப் படுவார் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பல கட்ட விசாரணைக்குப் பிறகு இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரரை இன்று காலை அந்நாட்டு ராணவத்திடன் இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Advertisement:

Related posts

பாகிஸ்தானில் புதுமண தம்பதி சிங்ககுட்டியை வைத்து எடுத்த போட்டோஷுட்!

Saravana Kumar

கொரோனா பாதிப்பு: நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு!

Halley karthi

நாள்தோறும் குறைந்து கொண்டே வரும் தினசரி கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

Leave a Reply