முக்கியச் செய்திகள் சினிமா

’அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தது: சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

ஐதராபாத்தில் நடைபெற்ற ’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இதில், ரஜினிகாந்துடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுக்க சென்னை திரும்பினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி யது. இதில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம், இன்று சென்னை திரும்பினார்.

இதற்கிடையே உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினி, அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

Halley karthi

மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்!

“எத்தனை அணிகள் உருவானாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” – ஜி.கே.வாசன்

Gayathri Venkatesan