உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்றிரவு வீடு திரும்பினார்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், கடந்த வியாழக்கிழமை மயக்கம் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்புக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதே போல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்தினர். இந்த நிலையில், ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு சரியானதையடுத்து, ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதனிடையே, Hoote App-ல் குரல்பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தாம் நலமாக உள்ளதாகக் கூறியுள்ளார். உடல்நலம்பெற பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என அவர் தெரிவித்தார்.








