ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மாமன்னன் ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் அரண்மனை சுவரின் செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஒரு மீட்டர் உயரத்தில் சுவரின் பாதி அளவு கண்டறியப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து தோண்டப்பட்ட குழிகளில் செங்கற்களால் கட்டப்பட்ட சுவரின் வடிவமைப்பின் மேல்தளம் மற்றும் கட்டடத்தின் 2 அடுக்கு சுவரின் செங்கல், இரும்பாலான ஆணிகள், சீன மண்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கப் பெற்றன. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்களால் ஆன சுவர்கள் முழு வடிவமைப்புடன் தற்போது தோண்டப்பட்ட குழிகளில் காணப்படுவதாக தொல்லியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரண்மனையின் தொடர்ச்சியான கட்டடப்பகுதி கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.