தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகத்தின் பணிக் காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. முதலில் அக்டோபர் மாதம் வரை, பின்னர் ஜனவரி மாதம் வரை என இரண்டு முறை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சண்முகத்தின் நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் முடிந்ததால், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 47ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்கிறார் ராஜீவ் ரஞ்சன்.

- பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் 1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
- துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜீவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
- 1995 முதல் 1997 வரை திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் நிதி மற்றும் தொழில் துறையில் இணைச் செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறையின் முதன்மைச் செயலாளராகவும், பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார்.
- பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார்.
- மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27 ஆம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டு, தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: