கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள சசிகலா, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, கடந்த கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவருக்கு, கடந்த 20-ம் தேதியே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி, சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினர். தற்போது, கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததால், சசிகலா, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா சிகிச்சை பெற்றதால் பெங்களூருவில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறார். மருத்துவமனை வாசலில் திரண்டிருந்த அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.







