ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் பட்டப்பகலிலேயே பிரதான சாலையில் காரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதியினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக மருத்துவ தம்பதியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







