ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தபட்ட மின்சார வழித்தடத்திற்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகரில் இருந்து ராஜபாளையம் வழியாக பகவதிபுரம் வரையிலான ரயில்வே தடத்தை மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இம்மின்சார வழித்தட பணிகள் குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த மின்சார பொறியாளர் சித்தார்த்தா, மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் இதற்கென செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள்,அதிவிரைவாக ரயில் செல்லும் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து அவர்கள் நிருபர்களை சந்தித்தனர்,அப்போது ஒரு மாதத்திற்குள் விருதுநகர்-செங்கோட்டை வரையிலான தடத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டும் என தெரிவித்தனர்.
—வேந்தன்







