சுட்டெரிக்கும் வெயில் – தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூரில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் தலையில் குடைகளை அணிந்து பெண்கள் தேயிலை பறித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுக்கா கேரள மாநிலம் எல்லையில் அமைந்துள்ளன. குறிப்பாக கேரளா…

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூரில் சுட்டெரிக்கும் வெப்பத்தால்
தலையில் குடைகளை அணிந்து பெண்கள் தேயிலை பறித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுக்கா கேரள மாநிலம் எல்லையில்
அமைந்துள்ளன. குறிப்பாக கேரளா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும்
நிலையில், இதனை ஒட்டி அமைந்துள்ள கூடலூர் பந்தலூர்,தாலுகாவிலும் வெயிலின்
தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால். தேயிலை தொழிலாளர்கள்
சுட்டெரிக்கும் வெப்பத்தால் தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறித்தனர்.

குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
தலைகளில் குடையை அணிந்தபடி தேயிலை பறித்து வருகின்றனர். மேலும்,
ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில்,
மார்ச் மாத இறுதியிலேயே தற்போதே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
இதனால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக
பாதிப்படைந்துள்ளது.

—-கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.