33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

‘சலார்’ திரைப்படத்தின முதல் டிக்கெட்டை பெற்றது யார் தெரியுமா?

‘சலார் திரைப்படத்தின முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக் கொண்டார்.

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து,  இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.  பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிரைலரிலும் அதைக் காண முடிந்தது.  சலார் திரைப்படம் வரும் டிச.22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.  சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.  வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்தது.  டிரைலர் வெளியான தமிழ்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.  இத்திரைப்படம் 2 மணி நேரம், 55 நிமிடங்கள், 22 நொடிகள் ரன்னிங் டைமாக உருவாகியிருக்கிறது.  தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள் என படக்குழு கூறியுள்ளது.

சலார் திரைப்படத்தின முதல் பாடல் 5 மொழிகளிலும் டிச.13-ம் தேதி வெளியானது.  தமிழில் ஆகாச சூரியன் எனும் பெயரில் வெளியானது.  இந்த நிலையில் படத்தின் முதல் டிக்கெட்டினை இயக்குநர் ராஜமௌலி பெற்றார்.  விரைவில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading