#RainUpdatesWithNews7Tamil | சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. இதனிடையே நேற்று இரவு முதலே…

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. இதனிடையே நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னைக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த 4 மாவட்டங்களிலும் முக்கிய துறைகளை தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.