3-வது டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி நாட்டிங்கம்மில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து தொடரை இழந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. தொடர் தோல்வியில் இருந்து இந்தியா மீண்டு வருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உத்தேசப் பட்டியல்:

இந்தியா: அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்/பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (wk), ஹாரி ப்ரூக் (c), ஜேக்கப் பெத்தல், டாம் பேன்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.