போதிய பயணிகள் இல்லை… #Chennai-ல் 8 விமானங்கள் ரத்து!

போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது.…

போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட்டிற்கு செல்லும் 4 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை காரணமாக விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 8 விமானங்களை தவிர்த்து, மற்ற விமானங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.