அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி …

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.5 – தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும்.

ஜன.6 – தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளிலும்,  கன்னியாகுமரி,  நெல்லை,  தென்காசி, விருதுநகர்,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.

ஜன.7 மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர்,  சென்னை,  காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.  மேலும்,

ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.