தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







