கைபர் பக்துன்க்வா மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள   மாத்ரே தாரா என்ற கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளால்   பொதுமக்கள் பெரும் தாக்குதலுக்குள்ளா வருகின்றனர்.

இதனால் இந்த அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள  மாத்ரே தாரா என்ற கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.

இன்று அதிகாலை 2 மணியளவில்  நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பயங்கரவாதிகள் மட்டுமின்றி பெண்கள் குழந்தைகள் ஆகியோரும்  உயிரிழதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.