இரவு 10 மணி வரை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 7) இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நவம்பர் மாதத் தொடக்கம் முதலே பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும்அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாகப் பல இடங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளக் கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இதன் காரணமாக இன்று (நவம்பர் 7) இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, கடலூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.