நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

உங்களைப் போலவே, நானும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன் என நாட்டு மக்களுகு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறுவதாவது, “ வணக்கம்! புனித தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் விளக்குகளால் ஒளிர்கிறது. இந்த ஒளித் திருவிழா, இருளுக்கு எதிரான நமது உறுதியின் தொடக்கமாகும். உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்களின் இந்தப் பண்டிகையும், உங்கள் எதிர்காலமும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பால் நிறைந்திருக்கட்டும்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் மேலும் கூறுகையில், ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் தனது பாரம்பரியம் குறித்தும், தான் இந்தப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் வீரமிக்க ராணுவ வீரர்களுடன் இந்தத் தருணத்தைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“உங்களைப் போலவே, நானும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். உங்களுக்குத் தெரிந்தபடி, இந்த நாளை நமது வீரர்களுடன் செலவிடுவது எனக்கு ஒரு பாரம்பரியமாகிவிட்டது. இந்த ஆண்டும் அந்தப் பழக்கத்தைத் தொடர்வேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.