முகலிவாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு; நேரில் ஆய்வு செய்த இபிஎஸ்

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை,…

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, சென்னை என பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னையை பொறுத்தவரை இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவிக நகர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர், திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையின் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கி நின்ற பகுதிகளை முதலமைச்சர் நேற்று நேரில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூர்,
திருவள்ளுவர் நகர், பெல் நகர், ஜெ.ஜெ.நகர், முகலிவாக்கம் உள்ளிட்ட இடங்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகலிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.