வல்லுனர் குழு அறிக்கையின்படி முறையான பராமரிப்பு கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு குளிர்கால கூட்டத்தொடரில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ரயில் பெட்டிகள் சீரான இடைவெளியில் பராமரிக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிதியாண்டில் ரயில் பெட்டி பராமரிப்புக்காக 11,263 கோடி ரூபாயும்; புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கவும் பழையனவற்றை மாற்ற 14,338 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய காலம் கடந்த ரயில் பெட்டிகள் பயணத்திற்கு உகந்ததல்ல என்று வல்லுனர் குழு கொடுக்கும் அறிக்கையின்படி அத்தகைய ரயில் பெட்டிகள் ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.







