முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களை, கடந்த 2 நாட்களில் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மீனவர்களின் படகுகளையும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை, திமுக எம்.பி.க்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில் அளித்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் எல்.முருகனும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்ததனர்.

மேலும், மீனவர்களை விடுவிக்கக்கோரி, இலங்கை அதிகாரிகளை, இந்திய தூதர் சந்திக்க உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை-மத்திய அரசு

G SaravanaKumar

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

G SaravanaKumar

ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!

EZHILARASAN D