முக்கியச் செய்திகள் தமிழகம்

‘ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது’ – மத்திய இணை அமைச்சர் முரளிதரன்

முந்தைய ஆட்சி போன்று இல்லாமல் தற்போது ரயில்வே துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையான அதிவிரைவு தொடர் வண்டி இன்று முதல் ஆவடியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான நிகழ்ச்சி ஆவடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியூரவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை அளித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மணியாச்சி ரயில் நிலையத்தை 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிப் புனரமைக்க உள்ளதாகத் தெரிவித்த அவர், 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெரு விழாவை முன்னிட்டு 75 புதிய ரயில்கள் துவங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் எம்.பி’

அதனைத் தொடர்ந்து பேசிய வெளியூரவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,கடந்த ஆட்சியிலிருந்ததைவிட தற்போது ரயில்வே துறை வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ரயில்களில் விபத்து ஏற்படாத வண்ணம் புதிய தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்தில்லா பயணம் என்பது ரயில்வேவின் குறிக்கோளாக உள்ளது எனக் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாதுகாப்பு மையமாக விளங்கும் ஆவடியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மங்களூர் ரயில் நிறுத்தம் தற்போது ரயில்வே துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி 

EZHILARASAN D

காமன்வெல்த் பேட்மிண்டன்-தங்கம் வென்றார் பி.வி.சிந்து

Web Editor

போச்சம்பள்ளியில் வினோதமாக வளர்க்கப்படும் மீன்கள்; பொதுமக்கள் வரவேற்பு

G SaravanaKumar