அவதூறாக பேசிய ரயில்வே காவலர்கள்; இளைஞர் தற்கொலை முயற்சி

காவல் நிலைய கழிவறை யை சுத்தம் செய்த சொன்னதால், லைசால் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதி. ரயில்வே காவலர்கள் மீது காவல் நிலையத்தில் புகார். சென்னை, வில்லிவாக்கம் திருவள்ளூர் தெரு…

காவல் நிலைய கழிவறை யை சுத்தம் செய்த சொன்னதால், லைசால் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதி. ரயில்வே காவலர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்.

சென்னை, வில்லிவாக்கம் திருவள்ளூர் தெரு ஏரிக்கரை பகுதியை சேர்ந்த
வெற்றிவேல்(22) என்ற இளைஞர் நேற்று நண்பகல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி செல்லும் ரயிலில் பயணித்த போது கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரை பிடித்து அவதுராக பேசி காவல் நிலையத்திற்கு பெயிண்ட் அடிக்குமாறு கூறியுள்ளனர்.

ஒரு மணி நேரம் பெயிண்ட் அடித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக சொன்னபோது, கழிவறையை சுத்தம் செய்து விட்டு போ என்று காவலர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெற்றிவேல் கழிவறையில் இருந்த லைசாலை எடுத்து குடித்துள்ளார்.

மயக்கம் அடைந்த வெற்றிவேலை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தற்போது உயர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுளார்.

வில்லிவாக்கம் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது நடவடிக்கை
எடுக்க கோரி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில், வெற்றிவேல் குடும்பத்தினர்
புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.