செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கப்
பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில்செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமைத் தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜாவிற்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்து ஒரு கிலோ மீட்டர் தூரம் மலர் தூவிச் சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் செங்கல்பட்டு
மாவட்டத் துணைத் தலைவராக சாய்சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரும், இணைச் செயலாளராக பெருங்களத்தூர் பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரும் பொதுக்குழுவில்
புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா, வருகின்ற மே.5ம்தேதி வணிகர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வணிகர் உரிமை மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலின் முன்னோடியாக நடைபெறும் இந்த வணிகர் மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர் எனவும் அறிவித்தார்.
இதில் மண்டல தலைவர் அமலராஜ்,மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்புச் செயலாளர் மாதவன் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.
-ரெ.வீரம்மாதேவி







