முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜூலை 16ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்

ஜூலை 16ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 43 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜூலை 16ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூலை 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நீட், மேகதாது, எரிபொருள் விலையுயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் குறித்தும், தமிழ்நாட்டின் நலன் சார்ந்து முன் வைக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

மும்பையிடம் போராடி வென்றது டெல்லி கேபிடல்ஸ்

Saravana Kumar

கொரோனாவால் உயிரிழந்தவர் உயிருடன் வந்தாரா? ஆந்திராவில் பரபரப்பு!

நெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை?

Vandhana