4 பேருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை நான் அதனை பெறுமையாக கருதுகின்றேன் என ரயில் மறியல் குறித்த விமர்சனங்களுக்கு கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் ராகுல் காந்தி
குற்றவாளி என கூறி தீர்ப்பு அளித்தது. இதனை கண்டித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மறியலின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கே எஸ் அழகிரி விரைவு ரயில் இஞ்சின் முன் மறியல் செய்வதற்காக சென்றபோது
காவல்துறையினர் தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது .
இதனையும் படியுங்கள்: ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!
கே.எஸ்.அழகிரி தனது கட்சிக்காரர்கள் நான்கு பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ” கை சின்னத்தில் ஐந்து விரல்கள் இருக்கும் ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரயிலை மறியல் செய்த போது நான்கு பேர் தான் இருந்தனர்” என விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதாவது..
”நான் எப்போதும் ஒரு போராளி. வேலை இல்லாதவர்கள், வெட்டி இல்லாதவர்கள் கூறும், செய்திகள்,மனநோயாளிகள் கூறும் கதைகள் போன்றவற்றை கணக்கில் எடுக்கக்கூடாது.
கும்பகோணத்திற்கு திருமண நிகழ்வுக்கு செல்லும் போது ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது தகுதி நீக்கம் குறித்த தகவல் வந்த போது 4 பேருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். நான் அதனை பெறுமையாக கருதுகின்றேன்.
கூட்டத்தை அப்போது நான் கூட்டியிருந்தால் அது விளம்பரம் ஆகியிருக்கும்” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.