தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் இளங்கோவன். இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராவார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இவர் மீது, 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.78 கோடி அளவில் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் அவருக்கு சொந்தமான 27 இடங்களில் (சேலம் -18, சென்னை-2, நாமக்கல்-2, கரூர்-1, திருச்சி-4) சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே பண மதிப்பிழப்பின் போது சுமார் 400 கோடி ரூபாயை கூட்டுறவு வங்கியில் மாற்றியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்களில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் மேலெழுந்திருந்தது. இதனையடுத்து தற்போது கூட்டுறவு வங்கி தலைவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.